இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சட்டவிரோதமாக பங்களாதேஷுக்கு கால்நடைகள் கடத்தப்பட்டு வருகின்றன . இதனை தடுப்பதற்காக எல்லைப் பாதுகாப்பு படையும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது குறித்த எல்லைப்பகுதியில் உள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.
இந்நிலையில், பசு ஒன்றின் இருபுறமும் வாழைமரத்தை கட்டிவிட்டு, அதன் கழுத்துப் பகுதியில் வெடிகுண்டை மாடு கடத்தல்காரர்கள் கட்டியுள்ளனர்.
இவ்வாறு வெடிகுண்டு கட்டப்பட்ட குறித்த பசு பங்களாதேஷ் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் அதனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
எல்லைப் பாதுகாப்பு படையினரை காயப்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தெரிவிக்கப்படுகிறது
.
0 comments:
Post a Comment