இரு மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவிவரும் அசாதாரண காலநிலை மாற்றத்தினால் இரு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.
தேசிய கட்டிட ஆராச்சி நிலைய தகவல்களின்படி இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே பிரதேச செயலக பகுதிக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்புல்பே வேவல்வத்தை பாதையை பயன்படுத்தும் போது பொது மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, நுவரெலிய மாவட்டத்தில் கொத்மலை பிரதேசத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசியக கட்டிட ஆராய்ச்சி நிலைய தகவல்களின்படி அடையாளம் காணப்பட்ட இடங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் தற்காலிகமாக அப்பிரதேசங்களிலிருந்து ஒதுங்கி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லல் அவசியமானதாகும். இதனைத்தான் சிவப்பு எச்சரிக்கை என்பதன் மூலம் நாடப்படுவதாகவும் பிரதீப் கொடிப்பிலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment