கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(06) சாட்சியம் வழங்கவுள்ளதாக அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இத்தெரிவுக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.
இதேவேளை, பிரதமருடன் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் இன்று சாட்சி வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சி விசாரணைகளின் பின்னர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை அழைப்பது தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment