332 பிரதேச செயலகங்களிலும் தொழிற் பேட்டைகளை அமைப்பேன்- சஜித்

எனது தந்தை ஆர். பிரேமதாச எந்தவொரு தேர்தலில் தோல்வியுற்றதில்லையெனவும் அவருடைய புதல்வரான நானும் தோற்கப் போவதில்லையெனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் நோக்கில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவிட்டதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.
ஓட்டமாவடி அமீரலி விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்த கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். தேசிய பாதுகாப்பு, சிறந்த முற்போக்கு, ஐக்கிய இலங்கையைக் கருத்திற்கொண்டு எனது சேவைகள் முன்னெடுக்கப்படும்.
புதிய பாதையை புதிய வேலைத் திட்டங்களை மக்கள் எதிர்நோக்குகின்றனர். தொழில் முயற்சி, தொழில்நுட்பத்தினூடாகவே, நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாட்டின் இயற்கை வளங்களைக் கொண்டு பாரியளவிலான கைத் தொழில் முயற்சிகள் முன்​னெடுக்கப்படவில்லை.
நாட்டிலுள்ள 332 பிரதேச செயலகங்களிலும் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க எண்ணியுள்ளேன்.
காலஞ்சென்ற எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்நாட்டில் இறுநூறு தொழில் பேட்டைகளை அமைத்தார். இதனால் ஏழை எழிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனது தந்தை வழியில் செல்வதே எனது நோக்கம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

2 comments:

  1. We use Geolocation detection to measure your physical location before allowing you to launch any of our games. When selecting the best casinos for online 빅카지노 on line casino playing, we took into consideration a wide variety|all kinds} of factors. They additionally offer a converter for if you wish to change the cryptocurrency you're be} using. In terms of the consumer interface, this isn't the simplest web site to make use of, particularly when comparability with} variety of the} other options. However, they do offer cellular compatibility which may be important to users. They even have an advanced search bar, which makes it simpler for users to seek for the games they want.

    ReplyDelete