இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா சுவராஜ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்” என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது. வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார். இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் அவசரகாலச் சட்டத்தை  எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார். 1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார். 1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார்.
“இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது” என இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  “மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்” என ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைபாறட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment