ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி கிழக்கில் முமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள், வடக்கு - கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், பல்கலைக்கழகச் சமூகங்கள் மற்றும் கல்விச் சமூகங்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.
தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை,
அரச அலுவலகங்கள் மற்றும் அரச மற்றும் தனியார் வங்கிகள் எதுவும் இயங்கவில்லை.
பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
0 comments:
Post a Comment