ராணுவத்தை மறக்க, மன்னிக்க நாம் தயாரில்லை - உறவுகள் பாய்ச்சல்

மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே நாம் ஒப்படைத்தோம். இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

எமது பிள்ளைகளைப் பிடித்துச் சென்று காணாமல் ஆக்கிய நிலையில் 'மறப்போம் மன்னிப்போம்' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு கூற முடியும்?

இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். இந்த மாதத்துக்குள் நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

இங்கு 'மறப்போம் மன்னிப்போம்' என்பதற்கு இடமே இல்லை. நாங்கள் ஆடு, மாடுகளை இராணுவத்தினரிடம் கொடுக்கவில்லை. எமது இரத்த உறவுகளையும், வீட்டில் இருந்தவர்களையும், எமது பிள்ளைகளையும், கடலுக்குச் சென்றவர்களையும் அவர்கள் பிடித்துச் சென்றுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் இருக்கிறார்களோ, இல்லையோ என்பதை நீதியுடன் கூறவேண்டும்.

இலங்கை அரசில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே நாங்கள் ஐ.நா.வை நம்பியுள்ளோம்  - என்றார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment