குண்டு வெடிப்பில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு - ரணில் அறிவிப்பு

நாட்டில்  இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் அரச செலவில் புனரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு அலரிமாளிகையில் சிறப்பு அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்திர தன்மையை சீர்குலைப்பதற்கு ஏதேனும் குழு ஒன்று முயற்சிக்குமாயின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் அதனை ஒடுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் என்ற ரீதியில் நாட்டில் ஸ்திய தன்மையை உறுதிசெய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பிரதமர் பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படமாட்டாது. 

இதற்கமைவாக ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் பாதுகாப்பு சபையை கூட்டி முப்படை மற்றும் பொலிஸாருடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்தையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தெளிவுப்படுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்தை நடத்தி பொலிஸ் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். காயங்களுக்குள்ளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

கல்வி அமைச்சருடன் பேச்சுவார்தை நடத்தி 2 தினங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்தை நடத்தி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

சபாநாயகருடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தை செவ்வாய்க்கிழமை கூட்டுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதேபோன்று எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடனும் பேச்சுவார்தை நடத்தி பொலிஸாருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

இதே போன்று அனர்த்தம் இடம்பெற்ற கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு சென்று ஏற்பட்ட பாதிப்புக்களை கண்டறிந்தேன். இதன் போது உயிரிழந்த நபர்களுக்காக நஷ்டஈடு வழங்குவதற்கும் பாதிக்கபட்ட கிறிஸ்தவ தேவாலயங்களை புனரைமப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். 

இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து போராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சு வார்ததை நடத்தப்பட்டது.இது தொடர்பாக தெலைபேசியின் ஊடாக மாகாநாயக்கர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது. அவர்கள் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். அமைதியை பாதுகாப்பதற்காக அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை நான் பாராட்டுகின்றேன்.

இதே போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு என்னுடன் உரையாடினார். பயங்கரவாதத்துக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார் . இதே போன்று ஈரானுக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பதிலாக அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்தார்.

நேபாளம் நாட்டின் பிரதமர் கே.பி சர்மா ஒளியின் சார்பில் அந்நாட்டு வெளிநாட்டு அரச தலைவர் மற்றும் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்தார். இந்த குழு தொடர்பில் வெளிநாட்டு தொடர்புகளை கண்டறிவதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்புகள் எமக்கு அவசியம். என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment