தேர்தல் பறக்கும் படையினரால் தமிழகத்தில்தான் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குறித்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இம் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் நிலையில், ஏப்ரல் 4 ஆம் திகதிவரை தமிழகத்தில் 137.81 கோடி ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
942 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் 95.79 கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்ரா மாநிலத்தில் 28.75 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழகத்தில்தான் அதிக அளவு பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment