முத்தலாக் தடை மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில் கடந்த 25ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால் எதிர்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. வாக்கெடுப்பில் முத்தலாக் தடை மசோதாவுக்கு மக்களவையில் 302 வாக்குகள் ஆதரவாகவும், 82 வாக்குகள் எதிராகவும் பதிவாகின. இதையடுத்து பெரும்பான்மை வாக்குகளுடன் மசோதா நிறைவேறியது.
இந்நிலையில், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் தவறாது வரவேண்டும் என பா.ஜ.க. சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேராத கட்சிகளின் ஒத்துழைப்போடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதாவை எதிர்க்கப் போவதாக ஐக்கிய ஜனதாதளம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment