நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்றார்.
உத்தரப்பிரதேசம், திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவிட்டார். இதில் மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்தி பென் பட்டேல் உத்தரபிரதேச ஆளுநராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், லக்னோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் ராம்நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஐக்கிய பிராந்தியம் என்று அழைக்கப்பட்ட அந்நாளைய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தின் ஒரு பகுதி, அரியானா, குஜராத்தின் ஒரு பகுதி என்ற பிரமாண்ட மாநிலத்தில் சுதந்திரத்திற்கு பின் முதல் ஆளுநராக சரோஜினி நாயுடு 1947 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால் மொழிவாரி மாநில பிரிப்பிற்கு பின் 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment