மம்தா, மாயாவதி, சரத்பவார் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து பறிபோக வாய்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்  தேசிய கட்சிகள் என்ற அந்தஸதை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அந்த கட்சிகளின் தலைமைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1968ம் ஆண்டு தேர்தல் சின்னம் தொடர்பான சட்டவிதியின்படி 4க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவான மொத்த வாக்குகளில் 6% வாக்குகளை பெறும் கட்சிகளே தேசிய கட்சி என்று அங்கீகரிக்கப்படும். மேலும் அந்த கட்சிக்கு மக்களவையில் குறைந்தது 4 உறுப்பினர்களை கொண்டிருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியாக கருதப்படும். மக்களவையின் மொத்த இடங்களில் 2% இடங்களை பெற்று அந்த இடங்களுக்கு குறைந்தது 3 வெவ்வேறு மாநிலங்களில் உறுப்பினர்கள் தேர்வாகி இருந்தாலும் தேசிய அரசியல் கட்சி என்ற அந்தஸதை பெற முடியும். அந்த அடிப்படையில் மேல் சொன்ன கட்சிகள் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பதே சிக்கலுக்கு காரணமாகும். மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் 34 இடங்களில் வென்று இருந்தது. ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த கட்சிக்கு 22 தொகுதிகளே கிடைத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மராட்டியத்தில் 5 இடங்களில் மட்டுமே தேசியவாத காங்கிரஸ் வென்றுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் இந்த கட்சிகளின் தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment