புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரும் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது தொடர்பான எந்த பரிசீலனையும் மத்திய அரசிடம் நிலுவையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அங்குள்ள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரியில் தற்போதைய நிலையே தொடர முடிவு செய்துள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது தொடர்பான எந்த பரிசீலனையும் மத்திய அரசிடம் நிலுவையில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment